"அப்பாவை அம்மா செங்கலால அடிச்சிச்சு" - 5 வயது சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்.. வசமாக சிக்கிய தாய்.!



  in Uttar Pradesh Shahjahanpur Wife Killed Husband 

கள்ளக்காதல் விசயத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற மனைவி, தனது தோழருடன் கைது செய்யப்பட்டார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர், டஹ் குலா கிராமத்தில் வசித்து வருபவர் யுனஸ் (வயது 40). இவரின் மனைவி ஷமீம் பனோ. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகின்றன. 

இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே, கடந்த டிசம்பர் 13 அன்று இரவு நேரத்தில் சாப்பிட்டுவிட்டு யுன்ஸ் உறங்கிக்கொண்டு இருந்தார். அச்சமயம், அவரின் மனைவி, தனது காதலர் மனோஸ் கான் என்பவருடன் சேர்ந்து கணவரை செங்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார். 

இதையும் படிங்க: ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை 3 துண்டாக வெட்டிக்கொலை; நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!

கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை

பின் கள்ளக்காதல் ஜோடி தலைமறைவான நிலையில், மறுநாள் காலையில் காவல்துறையினருக்கு கொலை தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின்போது, ஷமீம் - யுன்ஸ் தம்பதியின் 5 வயது மகன், அம்மா, அவரின் நண்பருடன் சேர்ந்து தந்தையை செங்கல்லால் அடித்ததாகவும், இதனால் அவர் சத்தமின்றி உறங்கியதாகவும் தெரிவித்துள்ளார். சிறுவனின் தகவலைத் தொடர்ந்து உண்மையை அறிந்த அதிகாரிகள் ஷமீம், மனோஸ் கான் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பாய் பெஸ்டி பேச்சைக் கேட்டு மனைவி விபரீதம்: கண்களில் மிளகுபொடித்தூவி, கல்லால் அடித்தே கணவன் கொலை..!