மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவன்; காதல் திருமணமான 7 மாதத்தில் கொடூரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி முஸ்கான் (வயது 23). இவருக்கும், அமன் என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது.
இதனையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஆக்ராவில் குடியிருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரம்; பெற்றோர் அதிர்ச்சி தகவல்..! காரைக்காலில் அதிர்ச்சி.!
கணவனின் சந்தேகம்
திருமணத்திற்கு பின் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், முஸ்கான் இளைஞர் ஒருவரிடம் பேசி வந்ததாகவும், அவருக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் அனுப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனைவியின் மீது அமன் சந்தேகம் அடைந்துள்ளார்.
சம்பவத்தன்று தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் காரணமாக ஆத்திரமடைந்த அமன், மனைவியின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி வீட்டை பூட்டி இருக்கிறார்.
பெண் பரிதாப பலி
இதனால் உடலில் தீ பரவி எரிந்த பெண்மணி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், முஸ்கனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டிஜேவின் நெஞ்சில் பாய்ந்த குண்டு.. பாரில் இரத்தவெள்ளத்தில் சுட்டுக்கொலை.! பதறவைக்கும் வீடியோ உள்ளே.!!