மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அண்ணியை கரம்பிடித்த கொழுந்தன்; ஆத்திரத்தில் சொந்த தம்பியை போட்டுத்தள்ளிய பாசக்கார சகோதரர்கள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பாத் மாவட்டம், பரவுட், குரானா கிராமத்தில் வசித்து வருபவர் சுக்ஹவீர். இவரின் மனைவி ரித்து. தம்பதிகள் இருவரும் திருமணத்திற்கு பின்னர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, சுக்ஹவீர் திடீரென இயற்கை எய்தியுள்ளார். இதனால் அவரின் மனைவி விதவையாக தவித்து இருக்கின்றனர்.
இதனிடையே, சுக்ஹவீரின் மனைவி, தனது கணவரின் தம்பியான யஷ்வீரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்க, ஓட்டுநராக யஷ்வீர் டெல்லியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இதையும் படிங்க: மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவன்; காதல் திருமணமான 7 மாதத்தில் கொடூரம்.!
அண்ணியை திருமணம் செய்ததால் சகோதரர்களுக்குள் சண்டை
இந்நிலையில், யஷ்வீரின் பிற 2 சகோதரர்களான உதயவீர் மற்றும் ஓம்வீர், யஷ்வீரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வீட்டில் அவ்வப்போது சண்டை நீடித்து வந்துள்ளது. யஷ்வீர் அண்ணியை எப்படி திருமணம் செய்யலாம்? என வாக்குவாதம் தொடர்ந்து இருக்கிறது.
சம்பவத்தன்று டெல்லியில் இருந்து சொந்த ஊர் வந்த யஷ்வீரிடம், அவரது சகோதரர்கள் உதயவீர், ஓம்வீர் தகராறு செய்து, யஷ்வீரை அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், யஷ்வீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சகோதரரை கொலை செய்த உதயவீர், ஓம்வீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது மூத்த மகன் இறந்துவிட, பிற 2 மகன்கள் கொலையாளிகளாக கைது செய்யப்பட, மற்றொரு மகனையும் இழந்துவிட்டதாக இவர்களின் தாய் கதறியழுதார்.
இதையும் படிங்க: 13 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரம்; பெற்றோர் அதிர்ச்சி தகவல்..! காரைக்காலில் அதிர்ச்சி.!