#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முற்றிப்போன ரீல்ஸ் மோகம்; இளம் தம்பதி, 3 வயது குழந்தை உடல் சிதறி பலி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அகமது (வயது 26). இவரின் மனைவி நஜ்ஜீன் (வயது 24). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் 3 வயதுடைய அப்துல்லா என்ற மகன் இருக்கிறார்கள்.
ரீல்ஸ் மோகம்
தம்பதிகள் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்து வெளியிடுவது வழக்கமானது என கூறப்படுகிறது. இதனிடையே, சம்பவத்தன்று மூவரும் தண்டவாளத்தில் இரயில் வரும்போது, ரீல்ஸ் வீடியோ எடுக்க முடிவெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தொண்டைக்குள் பலூன் சிக்கி சோகம்; 13 வயது சிறுவன் பரிதாப பலி.!
மூவரும் பலி
அதன்படி, இருவரும் தங்களின் குழந்தைகளுடன் தண்டவாளத்தில் இன்றபடி ரீல்ஸ் வீடியோ எடுத்த சமயத்தில், எதிர்பாராத விதமாக இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து 15 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை; போலி மருத்துவரின் விபரீதத்தால் சோகம்.!