திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மே 25ல் வலுப்பெறுகிறது ரீமால் புயல்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நாளை மறுநாள் புயலாக வலுப்பெறுகிறது. இந்த புயலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரீமால் என பெயரிட்டு இருக்கிறது.
ரீமால் புயல்
இப்புயல் மே 26ம் தேதி மாலை நேரத்தில் தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓமன் நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் பரிந்துரைப்படி ரீமால் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், மேற்குவங்கம் மாநிலத்தில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கியாஸ் கசிந்து சோகம்; உறங்கிக்கொண்டிருந்த பெற்றோர், 2 மகள்கள் என குடும்பமே பலி.!
இந்த புயலின் காரணமாக மே 23ம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்தில் மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதையில் வீண் தைரியம்; நீச்சல் தெரியாமல் ஆற்றில் குதித்த குடிகார இளைஞன் பலி; வீடியோ உள்ளே.!