வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதா?... தேர்தல் ஆணையம் விளக்கம்..!



Is Aadhaar number attachment made mandatory in voter list... Election Commission explains..

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமா என்பது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

பெங்களூரு, தேர்தல் ஆணையத்தின் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:- 

சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில், வாக்காளர் பட்டியலில் இருக்கும் தங்களின் பெயருடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் அவ்வாறு இணைக்காவிட்டால், அந்த பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுவிடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 

இத்தகைய செய்திகள், இந்திய தேர்தல் ஆணைய வழிமுறைகளுக்கு எதிராக இருக்கிறது. தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கவில்லை. வாக்காளர்கள் தாமாக முன்வந்து அவர்களின் பெயருடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கூறியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.