திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
3 மாத கர்ப்பிணி டிராக்டர் ஏற்றி கொலை : நிதி நிறுவன ஏஜெண்டுகள் கொடூர செயல்.. பறிபோன உயிர்.!
டிராக்டர் தவணை தொகையை செலுத்ததால் வாகனத்தை பறிமுதல் செய்ய வந்த ஏஜெண்டுகள் ஆத்திரத்தில் கர்ப்பிணி பெண்ணின் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக மோர்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் முதல்வராக பதவிவகித்து வருகிறார். அங்குள்ள ஹசாரிபாக் மாவட்டம் பரியாநாத் பகுதியை சேர்ந்தவர் மிதிலேஷ் மேத்தா. இவர் மாற்றுத்திறனாளி ஆவார்.
சமீபத்தில் தனியார் நிதி நிறுவனத்தின் மூலமாக கடன் பெற்று டிராக்டரை வாங்கியுள்ளார். இவரின் தொழில் நிலையில்லாமல் இருந்த காரணத்தால் தவணையை சரிவர செலுத்த இயலவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை டிராக்டரை நிதி நிறுவன ஏஜெண்டுகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை மிதிலேஷ் தடுத்த நிலையில், ரூ.1.30 இலட்சம் பாக்கி செலுத்தினால் வாகனத்தை எடுத்து செல்லலாம் என தெரிவித்துள்ளனர். உடனடியாக தன்னால் ரூ.1.20 இலட்சம் தர இயலும் என்று மிதிலேஷ் கூறவே, அதனை ஏற்றுக்கொள்ளாத ஏஜென்ட் டிராக்டரை எடுத்து செல்ல முயற்சித்துள்ளனர்.
அந்த சமயத்தில், ஏஜெண்டுகளை மிதிலேஷ் மற்றும் அவரின் 27 வயது மகள் தடுக்கவே, ஆத்திரமடைந்த ஏஜெண்டுகள் பெண்ணின் மீது டிராக்டரை ஏற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் மிதிலேஷின் மகள் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பலியாகினார். அவர் 3 மாத கார்ப்பிணியாக இருந்த நிலையில், இந்த சோகம் நடந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், பெண்ணை கொலை செய்ததாக நிதி நிறுவன ஊழியர்கள், மேலாளர் உட்பட 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. தவணை தொகைக்காக கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த பயங்கரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.