கர்நாடகாவில் பரபரப்பு... 5 வயது சிறுமி கடத்தி கொலை.!! கொலையாளி என்கவுன்டர்.!



karnataka-police-encounter-murderer-of-a-5-year-old-gir

கர்நாடக மாநிலத்தில் 5 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை காவல்துறையினர் என்கவுன்டர் செய்திருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கார் செட்டில் சிறுமியின் சடலம்

கர்நாடக மாநிலம் ஹூப்லி மாவட்டத்தில் அமைந்துள்ள கார் செட் ஒன்றில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள மக்கள் கார் செட்டுக்கு சென்று பார்த்தபோது 5 வயது சிறுமி சடலமாக காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர்.

India

கடத்திச் சென்று கொலை

காவல்துறையின் விசாரணையில் சிறுமி கடத்தி சென்று கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் கொலையாளியை அடையாளம் கண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த கொலையை செய்த ரித்தீஷ் குமார் என்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரை காவல் துறை கைது செய்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை கடத்தி வந்து கார் செட்டில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்ற போது சத்தம் போட்டதால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: கேரளாவில் கொடூரம்... 15 வயது சிறுமி கூட்டு பல்லாதகாராம்.!! 3 சிறுவர்கள் வெறி செயல்.!!

என்கவுன்டரில் சுட்டுக் கொலை

இந்நிலையில் காவல்துறை துணை ஆய்வாளர் அன்னபூர்ணா தலைமையில் ரித்தீஷ் குமார் தங்கி இருந்த இடத்தில் சோதனை செய்வதற்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றிருக்கிறார் ரித்தீஷ் குமார். இதனையடுத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் அன்னபூர்ணா. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரித்திஷ் குமாரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதன் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த என்கவுன்டர் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: மும்பையில் பரபரப்பு... 12 வயது சிறுமி கற்பழிப்பு குற்றவாளி மர்ம மரணம்.!! போலீஸ் விசாரணை.!!