மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருநங்கையுடன் 20 வருட லிவிங் டு கெதர்.. வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்.. போலீசுக்கு அதிர்ச்சி.!
தன்னுடன் வசித்து வந்த தோழியால் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துர்நாற்றம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள முருகேஷ் பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடந்த மே 3ம் தேதி துர்நாற்றம் வீசியுள்ளது. இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவரின் பெயரில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு ஒரு திருநங்கையின் உடல் கிடந்தது. அதை உடற்கூறு ஆய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பாத்ரூமில் தனக்கு தானே பிரசவம்.! பிய்ந்து கையோடு வந்த கால்கள்.! இளம்நர்ஸ் செய்த அதிர்ச்சி காரியம்!!
திருநங்கை கழுத்தை நெரித்து கொலை
பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த திருநங்கை கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் உயிரிழந்தவர் யார் என்பதை அறிந்து கொண்டனர். அவர் மஞ்சு பாய் என்று அழைக்கப்படும் மஞ்சு நாயக் என்ற 47 வயது திருநங்கை என்பது தெரிய வர, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை போலீசார் ஆராய ஆரம்பித்தனர்.
20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்வு
அப்போது கடந்த 20 ஆண்டுகளாக பிரேமா என்ற பெண்ணுடன் அவர் ஒரே வீட்டில் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பல்வேறு இடங்களில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர். பிரேமாவுக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக திருநங்கை மஞ்சு நாயக் சந்தேகம் அடைந்து அவருடன் சண்டை இட்டுள்ளார். இருவருக்கும் இடையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கொண்டே இருந்தது.
கொலையாளி தலைமறைவு
இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் மஞ்சுநாயக் அந்தப் பெண்ணை கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்து பிரேமா தப்பி அங்கிருந்த துண்டை எடுத்து மஞ்சு நாயக்கை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர், அங்கிருந்து பிரேமா தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிரேமாவை அவர்கள் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பேரதிர்ச்சி.. பரிதாபமாக பறிபோன உயிர்கள்.! பெருந்துயரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்!!