மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 ஆண்டு கழித்து திறக்கப்பட்ட அருவியில் குளித்த தமிழக இளைஞர் பலி... கேரளாவில் பரிதாபம்..!
2 வாரம் முன்னதாக திறக்கப்பட்ட அருவியில் குளித்த மதுரையை சேர்ந்த இளைஞர் கேரளாவில் பலியான சோகம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள அச்சன்கோவில், கும்பாவுருட்டி பகுதியில் அருவி உள்ளது. இந்த அருவியில் சுற்றுலா பயணிகள் வந்து நீராடி செல்வது வழக்கம். கடந்த 2017 ஆம் ஆண்டு அருவிக்கு குளிக்க வந்த 2 சுற்றுலா பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதனால் பாதுகாப்பு குறைபாடு கருதி வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கும்பாவுருட்டி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தது. இதனால் 5 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்காமல் இருந்து வந்தனர். இந்த சூழலில், கடந்த 2 வாரத்திற்கு முன்னரில் இருந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று சுற்றுலா பயணிகள் குளித்துக்கொண்டு இருக்கும்போது தீடீரென வெள்ளம் ஏற்பட, 25 பேர் அதில் சிக்கிக்கொண்டனர். அதிகாரிகள் அவர்களை பத்திரமாக மீட்ட நிலையில், மதுரையை சேர்ந்த குமரன் என்பவர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் அச்சன்கோவில் காவல் துறையினரால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.