#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கேரளாவில் பயங்கரம்... பெண் போலீஸ் வெட்டி கொலை.!! கணவன் தலைமறைவு.!!
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பெண் போலீஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் தந்தைக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சிவில் போலீஸ்
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவ்யஸ்ரீ. இவர் அங்குள்ள சாந்தாரா காவல் நிலையத்தின் சிவில் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் ராஜேஷ். இந்நிலையில் ராஜேஷ் மற்றும் திவ்யஸ்ரீ இடையே குடும்ப தகராறு நிலவி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.
கொலை செய்து விட்டு தலைமறைவு
இந்நிலையில் நேற்று திவ்யஸ்ரீ வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ராஜேஷ் எதிர்பார்க்காத நேரத்தில் திவ்யஸ்ரீயை வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இதனை தடுக்க முயன்ற திவ்யஸ்ரீயின் தந்தையும் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து திவ்யஸ்ரீ மற்றும் அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திவ்யஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிதைக்கப்பட்ட முகத்துடன் நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்.!! கற்பழித்து கொலையா.? போலீஸ் விசாரணை.!!
தப்பியோடியகணவனுக்குவலைவீச்சு
இதனையடுத்து உயிரிழந்த திவ்யஸ்ரீயின் உடலை கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய திவ்யஸ்ரீயின் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பெண் போலீஸ், கணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அடிதடி சண்டைக்கு மத்தியில் மனிதாபிமானம்; ஆம்புலன்சுக்கு வழிவிட்டு நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு.!