மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிதைக்கப்பட்ட முகத்துடன் நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்.!! கற்பழித்து கொலையா.? போலீஸ் விசாரணை.!!
ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடுத்தர வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு முகம் சிதைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத நிர்வாண பெண் சடலம்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்திலுள்ள காட்டோகாண்டோலா என்ற பகுதியில் முகம் சிதைந்த நிலையில் ஆடைகளில்லாமல் நிர்வாண நிலையில் பெண் சடலம் கிடந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.
கற்பழித்து கொலை
சடலமாக மீட்கப்பட்ட பெண் ஆடைகளின்றி கிடந்ததால் அந்த பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் வெளியாகி இருக்கிறது. மேலும் அந்தப் பெண் யார் என்று அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது முகத்தை கொலையாளிகள் சிதைத்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்த பெண்ணிற்கு 30 முதல் 35 வயதிருக்கலாம் எனவும் முதல் கட்ட தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடிதடி சண்டைக்கு மத்தியில் மனிதாபிமானம்; ஆம்புலன்சுக்கு வழிவிட்டு நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு.!
தீவிர விசாரணை
அந்தப் பெண் எதற்காக கொலை செய்யப்பட்டார்.? அவரது சடலத்தை வீசியது யார்.? மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார்.? என்பது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. ஆந்திராவில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்த காருக்கு ரூ.2.5 இலட்சம் அபராதம் விதிப்பு; வீடியோ வெளியானதால் காவல்துறை அதிரடி.!