இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; இளைஞர்களின் அதிவேகத்தில் தம்பதி ஒருசேர விபத்தில் மரணம்.!



in Kerala Couple Dies Road Accident 

 

கேரளா மாநிலத்தில் உள்ள பொத்தங்கொடு பகுதியில் வசித்து வருபவர் திலீப் (வயது 40). இவரின் மனைவி நீத்து (வயது 30). தம்பதிகள் இருவரும் கடந்த பிப்.15 அன்று இரவு நேரத்தில், தங்களின் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர். 

அப்போது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த 2 இளைஞர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனம் ஒன்று, இவர்களின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து தம்பதி தூக்கி வீசப்பட்டனர். 

இதையும் படிங்க: தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி 8 மாத கைக்குழந்தை பலி.. பெற்றோரே கவனம்.!

KERALA

இருவர் பரிதாப பலி

நிலைதடுமாறி சாலையில் விழுந்த இருவரும் நிகழ்விடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயது இளைஞர்கள் சச்சின், அபூயட்டி படுகாயம் அடைந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நான் அனாதைங்க.. பெண்களின் இரக்க மனதை இரக்கமேயில்லாமல் ஏமாற்றிய கொடுமை.. 4 திருமணம் செய்தது அம்பலம்.!