"காதலுக்கு கண்கள் இல்லை மானே" - ஆதரவற்றோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. வயோதிக ஜோடி திருமணம்.!



  in Assam Guwahati old aged Couple Marriage  

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி, பெல்ட்டாலா பகுதியில், வயதானோருக்கான ஆதரவற்ற இல்லத்தில் வசித்து வந்தவர் பத்மேஸ்வர் கோவாலா (வயது 71). இதே ஆதரவற்ற இல்லத்தில் வசித்து வந்த பெண்மணி ஜெயபிரபா (வயது 65).

இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஓராண்டாக நட்பு இருந்த நிலையில், ஒரே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வந்த காரணத்தால், மனம்விட்டு பேசி பின்னாளில் காதல் வயப்பட்டுள்ளனர்.

marriage

முறைப்படி திருமணம்

இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் அங்குள்ள பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். 

இதையும் படிங்க: "அம்மா கல்யாணம் வேண்டாம் மா" - சொல்லியும் கேட்காத பெற்றோர்.. விபரீத முடிவெடுத்த மகள்.!

முதியோர் இல்லத்தில் தொடர்ந்து தாங்கள் வாழ்ப்போவதாக தம்பதிகள் அறிவித்து இருக்கின்றனர். தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க: மணமேடையில்.. தாய் செய்த காரியம்.. பதறிப்போன மணமகன்.. இறுதியில் உறுதியான முடிவு.!