மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொம்பளைங்க அவசரத்துக்கு ஒதுங்கக்கூட முடியல.. அத்துவானக்காட்டில்.. தொங்கிய சடலம்.. பகீர் சம்பவம்.!
பாலியல் பலாத்காரம் :
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இரு கிராமத்து பெண்கள் மலம் கழிக்க வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது லால்பூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அந்த பெண்களை தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவர்களை வன்கொடுமை செய்துள்ளனர். பின் அந்தப் பெண்களை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பியோடியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் நினைவு திரும்பி தனது வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார்.
தொங்கிய சடலம் :
இதனை தொடர்ந்து குடும்பத்தினர் போலீசுக்கு சென்று புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால், அங்கே மற்றொரு பெண் இல்லை. அங்குமிங்கும் தேடி அலைந்துவிட்டு அவர்கள் திரும்பியுள்ளனர். இந்நிலையில், அந்த காட்டில் ஒரு பெண்ணின் சடலம் மரத்தில் தொங்குவதாக காவல்துறைக்கு மறுநாள் தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. 130 வயதுடைய முதியவரா இவர்?.. வியக்கவைக்கும் தகவல்.!
அவமானத்தில் தற்கொலை :
தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டதில், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அவமானம் தாங்க முடியாமல் தூக்கில் தொங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: 30 கிலோமீட்டர் தரதரவென இழுத்து... சப் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த கொடூரம்... காதல் ஜோடி கைது.!!