மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
30 கிலோமீட்டர் தரதரவென இழுத்து... சப் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த கொடூரம்... காதல் ஜோடி கைது.!!
மத்திய பிரதேச மாநிலத்தில் முக்கோண காதலால் எஸ்ஐ கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக லேடி கான்ஸ்டபிள் பல்லவி சோலங்கி மற்றும் அவரது காதலரான கான்ஸ்டபிள் கரண் தாக்கூர் ஆகியோரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கோண காதல்
மத்திய பிரதேச மாநிலத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த பல்லவி சோலங்கி மற்றும் கரண் தாக்கூர் ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பை தொடர்ந்து இருவரும் சிறிது காலம் பிரிந்துள்ளனர். அப்போது காவல் நிலைய எஸ்ஐ தீபாங்கர் கவுதம் மற்றும் பல்லவி சோலங்கி இடையே நெருக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கரண் தாக்கூர் மற்றும் பல்லவி சோலங்கி இருவரும் தங்கள் மனக்கசப்பை மறந்து மீண்டும் இணைந்துள்ளனர். இதனை எஸ்ஐ கவுதம் விரும்பவில்லை.
சப் இன்ஸ்பெக்டரை கொடூரமாக கொலை செய்து நாடகமாடிய காதல் ஜோடி
இந்நிலையில் தங்கள் காதலுக்கு இடையூறாக இருக்கும் தீபாங்கர் கவுதமை தீர்த்து கட்ட காதல் ஜோடி முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து எஸ்ஐ தீபாங்கர் கவுதம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பல்லவி சோலங்கி மற்றும் கரண் தாக்கூர் ஆகியோர் தங்கள் காரை வைத்து இடித்து 30 கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்று கவுதமை கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் காவல் நிலையம் வந்து எஸ்ஐ கவுதம் விபத்தில் சிக்கியது போல் நாடகமாடி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: பிக்னிக் பயணத்தில் இப்படியா?.. இராணுவ வீரரை தாக்கி தோழி 7 பேர் கும்பலால் சீரழிப்பு.. ம.பி-யில் பயங்கரம்.!
விசாரணையில் வெளியான உண்மை
பல்லவி சோலங்கி மற்றும் கரண் தாக்கூர் ஆகிய இருவரின் நடவடிக்கை முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கான்ஸ்டபிள் இருவரும் எஸ்ஐ கவுதமை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில், சாலையோரம் இளம்பெண் பலாத்காரம்; வேடிக்கை பார்த்த மக்கள்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்.!