மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வங்கி வாடிக்கையாளருக்கு உதவி செய்வது போல நடித்து, ரூ.7.5 இலட்சம் திருடிய வங்கி பணியாளர்..!
விபரம் அறியாமல் வங்கிக்கு வரும் பெண்ணிடம் உதவி செய்வதை போல நடித்த வங்கி உதவியாளர், அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ7.5 இலட்சம் பணம் திருடிய சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி கிளையில், ஜானகி என்ற பெண்மணி வங்கி கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கி கணக்கு வரவு, செலவு கணக்கு மற்றும் பணம் எடுக்கும் விஷயங்களுக்கு வங்கியில் பணியாற்று வரும் ஊழியரான தினேஷ் என்பவரிடம் அவர் உதவி கேட்பது வழக்கம்.
இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்ததால், ஜானகி வங்கிக்கு வரும்போது தினேஷ் அதற்கான உதவியும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 7.5 லட்சம் பணம் மாயமானது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில் நடைபெற்ற விசாரணையில், ஜானகிக்கு இன்டர்நெட் சேவை தொடர்பாக விஷயங்களை புதுப்பித்துக் கொடுத்த தினேஷ், அவரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கடவுச்சொற்களை உபயோகம் செய்து பணத்தை தஹிருடியது அம்பலமானது. தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.