மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டு 6 வயது சிறுமிகள் பலாத்காரம்; 45 வயது பள்ளிப்பேருந்து ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!
பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் நபர், 6 வயது மாணவிகள் இருவரை பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், வானொவரியே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ - மாணவிகளை தினமும் பள்ளிக்கு அழைத்துவந்து, பின் மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விட பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: வீட்டில் கொள்ளை, இளம்பெண் பலாத்காரம்.. குழந்தையை கொள்வதாக மிரட்டி துயரம்.!
சிறுமிகள் பலாத்காரம்
இந்த நிலையில், பள்ளியில் பயின்று வரும் 6 வயது சிறுமிகள் இருவரை, பள்ளியில் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வரும் 45 வயதுடைய நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவருகிறது. மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று விடும்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
வீட்டிற்குச் சென்ற சிறுமிகள் இருவரும் தங்களுக்கு நேர்ந்ததை கூறி, அந்தரங்க பகுதியில் வலிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் பதிவு செய்யபட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பத்லாபூர் பகுதியில் 2 சிறுமிகள் பள்ளியின் தூய்மை பணியாளரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்து, சமீபத்தில் குற்றவாளி என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் பயிற்சி வகுப்பில் கொடூரம்; மாணவியிடம் அத்துமீறல்.. பகீர் சிசிடிவி காட்சிகள்..!