கடனுக்காக இளம்பெண் குத்திக்கொலை.. சக ஊழியர் நடத்திய பயங்கரம்.. பதறவைக்கும் காட்சிகள்.!



Maharashtra Pune Worker Killed by man in Work Place 

ரூ.4 இலட்சம் கடன் வாங்கி, திருப்பி கொடுக்க காலம் தாழ்த்திய பெண் பணியிடத்திலேயே சக ஊழியரால் கொல்லப்பட்ட பயங்கரம் புனேவில் நடந்துள்ளது. 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள புனே, இயரவாடா பகுதியில் செயல்பட்டு வரும் WNS கம்பெனியில் வேலை பார்த்து வரும் பெண்மணி சுபதா சங்கர் (வயது 28). இவருடன் வேலை பார்த்து வரும் சக தொழிலாளி கிருஷ்ணா சத்யா நாராயணன் (வயது 30).

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 06:15 மணியளவில் சுபதாவிடம் கிருஷ்ணா வாகன நிறுத்துமிடத்தில் வைத்து வாக்குவாதம் செய்தார். இதனிடையே, திடீரென ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றவர், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து, சுபத்தவை சரமாரியாக வெட்டினார். 

இதையும் படிங்க: சிறுமியின் மீது விழுந்த இளைஞர்.. தலையில் காயமடைந்து, மூக்கு உடைந்து பரிதாப மரணம்.!

maharashtra

அதிக ரத்தப்போக்கால் மரணம்

இதில் அதிக இரத்தப்போக்கு காரணமாக பாதிக்கப்பட்ட சுபதா, நிகழ்விடத்தில் உயிருக்கு போராடினார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சுபதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனிடையே, கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சுபதா கிருஷ்ணாவிடம் இருந்து ரூ.4 இலட்சம் கடன் வாங்கி இருக்கிறார். இதனை திரும்ப செலுத்தாமல் சுபதா காலம் தாழ்த்தவே, அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல் & கொலை சம்பவம் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. 

இந்த சம்பவத்தில் சுபதா கொல்லப்படுவதன் பதைபதைப்பு வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: புதுமணமக்கள் போல அலங்கரித்து தம்பதி தற்கொலை.. 28ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி சோகம்.!