Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
புதுமணமக்கள் போல அலங்கரித்து தம்பதி தற்கொலை.. 28ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி சோகம்.!
திருமண நாளை மகிழ்ச்சியாக சிறப்பித்த தம்பதி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், மார்ட்டின் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெர்யல் என்ற டோனி ஆஸ்கர் மொன்கிரிப்ட் (வயது 56). இவரின் மனைவி அண்ணி (வயது 45).
இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமி பலாத்காரம்; புத்தாண்டு அன்று கொடூரம்..!
தம்பதிகள் இருவருக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், சம்பவத்தன்று இருவரும் தூக்கிட்டு நிலையில் தற்கொலை செய்தவாறு வீட்டில் இருந்தனர்.
நிதிச்சுமை காரணமாக சோகம்?
இருவருக்கும் தற்போது வரை குழந்தை இல்லை. அதேபோல, சமீபகாலமாக நிதிச்சுமை காரணமாக இருவரும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
தம்பதிகளின் மரணத்திற்கு முன்னர், அவர்களின் 28 வது ஆண்டு திருமண விழாவை சிறப்பித்த நிலையில், திருமணமான புதுமணத்தம்பதிகள் போல உடைகளை மாற்றி இவர்கள் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விஷயம் குறித்து நாக்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 வயது மாணவரை பலாத்காரம் செய்த 27 வயது ஆசிரியை; பள்ளி வளாகம், வீடு என பதறவைக்கும் சம்பவம்.!