#Breaking: மேற்குவங்கம் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலக மம்தா பானர்ஜி முடிவு? - பரபரப்பு அறிவிப்பு.!



mamata-banerjee-says-ready-to-resign-cm-post

 

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் வேலை பார்த்தபடி பயின்று வந்த பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் மரணத்திற்கு நீதிகேட்டு மாநிலத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த விஷயம் குறித்து சிபிஐ விசாரணை ஒருபுறம், மற்றொருபுறம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேரடி விசாரணை என கொல்கத்தா மருத்துவர் மரண விவகாரம் குறித்து தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அம்மாநில மக்கள், மாநில அரசுக்கு எதிராக குரல் எழுப்பி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: மலைப்பாதையில் நடந்த சோகம்; கார் மீது லாரி சாய்ந்து, 4 பேர் பலி.!

அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் பாஜக, காங்கிரஸ் உட்பட கட்சிகள், தங்களின் பங்கிற்கு கடுமையான எதிர்ப்பை மாநில அரசுக்கு எதிராக முன்வைத்து வருகிறது. மேலும், அதிகாரிகளின் விசாரணையில் பெண் மருத்துவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, ஒருவரால் தான் வன்கொடுமை என மாறுபட்ட தகவல்கள் குழப்ப சூழலை உருவாக்கி இருக்கிறது.

இந்நிலையில், "மக்களின் நலனுக்காக மேற்குவங்க முதல்வர் பதவியில் இருந்து நான் விலக தயாராக இருக்கிறேன். கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கும், எனக்கும் நீதி வேண்டும் என்பதால் நான் எனது பதவியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். மருத்துவர்களின் போராட்டத்தை என்னால் முடிவுக்கு கொண்டு வர முடியாததற்கு வருந்துகிறேன். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படப்போவதில்லை" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனால் மேற்குவங்க அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களிடம் அமைதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தச்சென்று, 2 மணிநேரத்திற்கு மேலாக அவர் காத்திருந்து திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பிக்னிக் பயணத்தில் இப்படியா?.. இராணுவ வீரரை தாக்கி தோழி 7 பேர் கும்பலால் சீரழிப்பு.. ம.பி-யில் பயங்கரம்.!