மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாம்பு கடித்த அடுத்த நொடியே உயிர் பிழைக்க வாலிபர் செய்த காரியம்.! உயிரிழந்த பாம்பு.! ஷாக்கான மருத்துவர்கள்!!
பீகார் மாநிலம் ரஜெவுலியின் காட்டுப்பகுதியில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏராளமான ஊழியர்கள் அப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 35 வயது நிறைந்த சந்தோஷ் லோகர் வேலை முடித்துவிட்டு கூடாரத்தில் உறங்க சென்றுள்ளார்.
தன்னை கடித்த பாம்பை மீண்டும் கடித்த ஊழியர்
அப்பொழுது விஷபாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. உடனே சந்தோஷ் லோகர் அந்த பாம்பை கையில் பிடித்து தூக்கி இரண்டு முறை அதனை கடித்துள்ளார். மேலும் அவர் கடித்ததில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. தொடர்ந்து அவர் கையில் பாம்புடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் மருத்துவர் இப்படி செய்யலாமா?.. திருமணத்திற்கு மறுத்த காதலனின் ஆணுறுப்பை துண்டித்த பயங்கரம்.!
உயிர்பிழைத்த வாலிபர்
அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தநிலையில் சந்தோஷ் லோகர் உயிர்பிழைத்தார். மேலும் பாம்பு கடித்தால் அந்த பாம்பை உடனடியாக 2 முறை கடித்தால் நம் உடலில் ஏறிய விஷம் பாம்பின் உடலுக்கே மீண்டும் சென்றுவிடும். அதனால் நாம் உயிரிழக்க மாட்டோம் என்ற நம்பிக்கை தங்களது கிராமத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
கிராமத்து நம்பிக்கை
இதனை கேட்டு ஷாக்கான மருத்துவர்கள் பாம்பை திரும்ப கடிப்பதால் நமக்கு பாதிப்பு மேலும் அதிகமாகும். இதுபோன்ற மூடநம்பிக்கைகளை நம்பாதீர்கள். உங்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைத்ததால்தான் நீங்கள் உயிர் பிழைத்துள்ளீர்கள் என அறிவுரை கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த மகளை சீரழித்த தந்தை; வீடியோவை வெளியிட்டு நியாயம் கேட்ட மகள்.. பதறவைக்கும் சம்பவம்.!