திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெண் மருத்துவர் இப்படி செய்யலாமா?.. திருமணத்திற்கு மறுத்த காதலனின் ஆணுறுப்பை துண்டித்த பயங்கரம்.!
பீகார் மாநிலம், சரண் மாவட்டம், ஹாஜிபுர் பகுதியில் வசித்து வரும் 25 வயது இளம்பெண், பயிற்சி மருத்துவராக வேலை பார்க்கிறார். இவரிடம் பழக்கத்தை ஏற்படுத்திய 12 வது வார்டு கவுன்சிலர், பின்னாளில் அதனை காதலாக மலர வைத்துள்ளார். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, 5 ஆண்டுகால காதலை திருமண உறவுக்குள் கொண்டுசெல்ல மருத்துவர் திட்டமிட்ட நிலையில், காதலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். பலமுறை தன்னை திருமணம்செய்யக்கூறி கவுன்சிலரான காதலரிடம் வைத்த கோரிக்கையும் நடைபெறவில்லை.
இதையும் படிங்க: சொந்த மகளை சீரழித்த தந்தை; வீடியோவை வெளியிட்டு நியாயம் கேட்ட மகள்.. பதறவைக்கும் சம்பவம்.!
திருமணத்திற்கு மறுத்தால் ஷாக் சம்பவம்
இதனால் சம்பவத்தன்று காதலரின் வீட்டிற்கு சென்ற பெண் மருத்துவர், திருமணம் குறித்து பேசி இருக்கிறார். அப்போதும் அவர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், காதலரின் ஆணுறுப்பை பெண் துண்டித்து இருக்கிறார். இதனால் ஏற்பட்ட வலி பொறுக்காமல் கதறிய இளைஞரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காதலனின் ஆணுறுப்பை காதலி அறுத்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பெண் மருத்துவருக்கு எதிராக வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை முன்னெடுத்தனர். கைதுக்கு பின் பெண் மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டார். கவுன்சிலர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியையை விரட்டி விரட்டி பலாத்காரம் செய்ய முயற்சி; தலைமை ஆசிரியரின் வெட்கக்கேடான செயல்.!