திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சொந்த மகளை சீரழித்த தந்தை; வீடியோவை வெளியிட்டு நியாயம் கேட்ட மகள்.. பதறவைக்கும் சம்பவம்.!
பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் பகுதியை சேர்ந்த ஆசிரியருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் பதின்ம வயதுடைய மகள் இருந்துள்ளனர். ஆசிரியருக்கு தனது இளம் மகள் மீது மோகம் திரும்ப, கயவன் சொந்த மகள் என்றும் பாராது அவரை சீரழித்து இருக்கிறான். ஒருகட்டத்தில் தந்தையின் செயல் குறித்து மகளுக்கு உண்மை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மகள் தனது தாயாரிடம் இதனை தெரிவிக்க, அவரோ கணவரை கண்டித்து மேற்படி மகளுக்கு துணை நிற்காமல் கணவனுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன சிறுமி, தந்தை தன்னிடம் அத்துமீறுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனுடன் தனக்கு நியாயம் வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியையை விரட்டி விரட்டி பலாத்காரம் செய்ய முயற்சி; தலைமை ஆசிரியரின் வெட்கக்கேடான செயல்.!
தந்தை - தாய் போக்ஸோவில் கைது
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அதிர்ந்துபோன நெட்டிசன்கள் விசாரணைக்கு கோரிக்கை வைக்க, காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தந்தையை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் தற்போது சிறையில் இருக்கும் நிலையில், வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள காவல் துறையினர், மேற்படி சில நபர்களையும் இவ்வழக்கில் தொடர்புடையவர்களாக கருதி கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இதனால் சிறுமி 2 ஆண்டுகளுக்கு முன்பதிவு செய்த காணொளி தற்போது மீண்டும் இணையங்களில் வைரலாகி வருகிறது.
बिहार समस्तीपुर//
— Karan Kumar Bhargav (@KkaranK90903745) July 1, 2024
🔶अपनी ही बेटी के साथ रेप करता था पिता, पेशे से था शिक्षक, वीडियो वायरल होने के बाद हुआ गिरफ्तार !!
🔶वीडियो वायरल होने के बाद एक शिक्षक पिता की घिनौनी करतूत का खुलासा हुआ था !! pic.twitter.com/TO6mp6EpTu
இதையும் படிங்க: மழையின்போது மொட்டை மாடி டான்ஸ் பிரியரா நீங்கள்?.. திடீரென தாக்கிய மின்னல்.! ரீல்ஸ் மோகத்தால் பகீர்.!