மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: பயணிகள் இரயிலில் பயங்கர தீ விபத்து; பீகாரில் பகீர் சம்பவம்.!
பீகார் மாநிலத்தில் உள்ள கியுள் நகரில் இரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இன்று பயணிகள் இரயில் ஒன்று, இரயில் நிலையத்திற்கு அருகே வந்த நிலையில், திடீரென தீ விபத்தில் சிக்கி இருக்கிறது.
பயணிகள் இரயிலில் தீ விபத்து
இந்த தீ விபத்து மளமளவென அடுத்ததடுத்த பெட்டிகளுக்கும் பரவியதால், இரயில் முழுவதும் தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதனால் பயணிகள் மற்றும் அங்கிருந்த மக்கள் அனைவரும் பதறியபடி ஓட்டம் பிடித்தனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களில் சிலர், அங்கிருந்த தண்ணீர் பைப் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: 2 சரக்கு இரயில்கள் மோதி பயங்கர விபத்து; இரயில் ஓட்டுனர்கள் படுகாயம்., பஞ்சாபில் அதிர்ச்சி.!
இந்த விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: நள்ளிரவில் திரைப்பட பாணியில் தீ விபத்து; நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!