மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாருப்பா அந்த காண்ட்ராக்டரு?.. கால்வாய்க்கு நடுவே மின்கம்பம்.. இது புதுசா இருக்குன்னே.!
மின்கம்பத்தை நடுவில் இறுதி, இருபுறமும் கால்வாய் அமைத்த சம்பவம் வில்லியனூரில் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர், வில்லியனூர் - பர்கூர் சாலையில், உருவையாறு ஜெயம் நகர் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ஐயோ.. அம்மா.... மாமூல் தர மறுத்தால் கடை உரிமையாளரை சோடா பாட்டிலால் தாக்கிய போதை கும்பல்.!
சாலையோரம் கால்வாய்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, கால்வாய் அமைக்கப்பட்டு வந்த நிலையில், கால்வாய்க்கு நடுவே மின்கம்பம் ஒன்று இருந்துள்ளது.
போட்டோ வைரல்
இந்த மின்கம்பத்தை மட்டும் நடுவில் அப்படியே விட்டுவிட்டு, ஒப்பந்த பணிகளை மேற்கொண்டவர்கள் கால்வாயை அமைத்து இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்த புகைப்படம் வெளியாகி தற்போது விமர்சனத்தை பெற்று வருகிறது.
செலவை ஏற்பது யார்?
சாலையோரம் புதிதாக கால்வாய்கள் அமைக்கப்படும்போது, அதன் வழியில் இருக்கும் மின்கம்பங்கள் போன்றவை அகற்றப்பட்டு பொதுவாக கால்வாய் அமைக்கப்படும். ஆனால், அரசு அதிகாரிகளுக்குள் இருக்கும் குளறுபடி நடவடிக்கையால், இவை ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் நபர்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.
நம்ம வேலைய பார்த்துட்டு போவோம்
அதேநேரத்தில், மின்கம்பத்தை அகற்றும் பணிக்கான செலவை ஒப்பந்ததாரர்களை ஏற்றுக்கொள்ள மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தப்படுவதால், அவர்கள் எந்த விதமான பதிலையும் அளிக்காமல் தங்களின் வேலைகளை கவனித்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "ஆவதும் பெண்ணாலே., அழிவதும் பெண்ணாலே".. 14 வயது சிறுமி பலாத்காரம்., பவர் மாத்திரையால் பறிபோன உயிர்.!