மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோயில் அருகே பயங்கரம்.. கணவன் கண் முன்னே.. புதுப்பெண் கூட்டு பலாத்காரம்.!! 7 பேர் அதிரடி கைது.!!
மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக திருமணமான இளம் பெண் 8 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
புதுமண தம்பதிகளிடம் தகராறு
மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தங்களது திருமணத்தை தொடர்ந்து அங்குள்ள புகழ்பெற்ற பாபா பைரவா கோவிலில் ஆசிர்வாதம் வாங்குவதற்காக புதுமண தம்பதிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் கடவுள் தரிசனத்தை முடித்துவிட்டு கணவன் மற்றும் மனைவி தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் மது போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் புதுமணத் தம்பதிகளிடம் தகராறு செய்துள்ளது.
புது பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு
இதனைத் தொடர்ந்து கணவனை தாக்கிய கும்பல் அவரை கட்டிப்போட்டது. மேலும் அவர் கண் முன்னே புது பெண்ணை 8 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இதனைக் கண்ட இளம் கணவன் அலறி துடித்தார். எனினும் அந்த கும்பல் பாலியல் பலாத்காரத்தை கைவிடவில்லை. மேலும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை அந்த கும்பல் வீடியோ பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தன்னை ட்ரோல் செய்த யூடியூபர்களுக்கு எதிராக நீதிமன்ற சம்மன் வழங்கிய 10 வயது சிறுவன்; யார் இந்த அபினவ் அரோரா.!
காவல்துறை நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக புதுமண ஜோடி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் இந்தப் படுபாதக செயலில் ஈடுபட்ட ராவிஷ் குப்தா, லவ்குஷ் கோரி, ராஜேந்திர கோரி, கருட் கோரி, தீபக் கோரி, ராம்கிஷான் கோரி மற்றும் சுசில் கோரி உள்ளிட்ட 7 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்நிஷ் கோரி என்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கணவன் கண் முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: #JustIN: கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்துச்சிதறி சோகம்; 154 பேர் படுகாயம்.. கேரளாவில் துயரம்.!