53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அடக்கொடுமையே.. சொந்த மகள் 4 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம்.!! 40 வயது தந்தை தப்பியோட்டம்.!!
மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தை மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளுக்கு பாலியல் தொல்லை
மத்திய பிரதேசம் மாநிலத்தின் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது தந்தை தனது 21 வயது மகள் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த நபர் தனது மகளைக் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் இது குறித்து வெளியே கூறினால் மனைவி மற்றும் மகளை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
காவல் நிலையத்தில் புகார்
இந்நிலையில் அவரின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத மனைவி மற்றும் மகள் ஆகியோர் லவ்குஸ் நகர காவல் நிலையத்தில் தந்தைக்கு எதிராக புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இளம் பெண்ணின் தந்தை கடந்த 4 ஆண்டுகளாக மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: திருவிழாவில் அலங்கார மின்விளக்கால் சோகம்; மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்.. தப்பிய குழந்தை..!
போக்சோ வழக்குப்பதிவு
மேலும் சிறுமி 17 வயதாக இருக்கும் போதே அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததால் காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தன் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் 40 வயது தந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: Video: தலைமுடியை பிடித்து, உருண்டு அடித்துக்கொண்ட மாணவிகள்.. அலேக்காக தூக்கிய பெரியக்கா.. பகீர் வீடியோ.!