53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
திருவிழாவில் அலங்கார மின்விளக்கால் சோகம்; மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்.. தப்பிய குழந்தை..!
மின் விளக்குகளில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார், அவர் தூக்கி வந்த குழந்தை அதிஷ்டவசமாக உயிர் தப்பியது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டம், நெக்கொண்டா, அலங்காநிபேட்டா கிராமத்தில் பதுகம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில், அதற்காக மின் விளக்கு அலங்காரம் தெருக்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இதையும் படிங்க: கட்டுக்கட்டா என் பொண்டாட்டி லஞ்சம் வாங்குறா: நேர்மையின் சிகரமாக பாசமிகு கணவர்.! ஆதாரத்துடன் போட்டுக்கொடுத்த சம்பவம்.!
இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த காதம் யக்கம்மா (வயது 45) என்பவர், மின் விளக்குகளை கடந்து சென்றபோது, கைகளால் வயரை பிடித்து தூக்கிவிட்டு அப்பகுதியை கடந்து செல்ல முற்பட்டார். அவருடன் கைக்குழந்தை ஒன்றும் இருந்தது.
மின்சாரம் தாக்கி பலி
அச்சமயம் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கவே, இந்த சம்பவத்தில் காதம் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் பின்னாலேயே இருவர் வந்த நிலையில், அவர்கள் மற்றும் காதம் தூக்கி வந்த குழந்தை அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்த சம்பவம் அங்கிருந்த காரின் டெஷ்கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
కారు డాష్ క్యామ్ ఫుటేజ్.. బతుకమ్మ పండుగ వేడుకల్లో విషాదం
— Telugu Scribe (@TeluguScribe) October 11, 2024
వరంగల్ జిల్లా నెక్కొండ మండలం అలంకానిపేట గ్రామంలో బతుకమ్మ వేడుకల కోసం ఏర్పాటు చేసిన విద్యుత్ లైట్లు తగిలి చీకటి యాకయ్య (45) అనే వ్యక్తి మృతి చెందాడు.
యాకయ్య చేతిలో చిన్నారి ఉండగా.. అదృష్టవశాత్తు చిన్నారి ప్రాణాలతో… pic.twitter.com/aDld7gAezm
இதையும் படிங்க: கட்டிடத்தை இடிக்கும் பணியில் சோகம்; பைனல் டெஸ்டினேஷன் திரைப்பட பாணியில் பகீர் சம்பவம்.!