மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் குழந்தைகளுடன் தவிக்கும் பெற்றோர்கள்! புலம்பெயர் தொழிலாளர்களின் இன்னல்கள்! கண்கலங்க வைக்கும் வீடியோ!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கூலித்தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பலரும் வேலையிழந்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வேலையில்லாமல், உணவின்றி தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கினர்.மேலும் ஊரடங்கால் பேருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் நடந்தே செல்கின்றனர்.
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக பொருளாதாரத்திட்டங்கள், நிதித்தொகுப்பை மத்திய அரசு அறிவிக்கக் வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டு, இது ஒரு கடினமான நேரம். அனைவரின் பாதுகாப்பிலும் நாங்கள் நிற்கிறோம். அவர்களின் அலறல்கள் அரசாங்கத்தை சென்றடையும் என பதிவிட்டுள்ளார்
अंधकार घना है कठिन घड़ी है, हिम्मत रखिए-हम इन सभी की सुरक्षा में खड़े हैं। सरकार तक इनकी चीखें पहुँचा के रहेंगे, इनके हक़ की हर मदद दिला के रहेंगे। देश की साधारण जनता नहीं, ये तो देश के स्वाभिमान का ध्वज हैं... इसे कभी भी झुकने नहीं देंगे। pic.twitter.com/bBf48DiluY
— Rahul Gandhi (@RahulGandhi) May 14, 2020