திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை; காவல்துறை விசாரணை.!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கார்காளா, போலா பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (வயது 36). இவர் மனநலம் பாதிக்கப்ட்டவர் என கூறப்படுகிறது. கடந்த மே 3ம் தேதி இவர் தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார்.
தற்கொலைக்கு முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
கடந்த 13 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்த பெண்மணி, மே 3ம் தேதி திடீரென தனது உடலில் மண்ணெணெய் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: மனைவியை கொலை செய்து செல்பி எடுத்து அனுப்பிய கணவன்; அடுத்தடுத்து நடந்த பயங்கரத்தால் கதறும் உறவினர்கள்.!
சிகிச்சை பலனின்றி பலி
அவரை மீட்ட உறவினர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பெண்மணி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச்சென்று இலட்சக்கணக்கில் பேரம் பேசிய காவல்துறை; மர்ம மரணமடைந்த இளைஞர்.!