திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியை கொலை செய்து செல்பி எடுத்து அனுப்பிய கணவன்; அடுத்தடுத்து நடந்த பயங்கரத்தால் கதறும் உறவினர்கள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டத்தில் உள்ள எட்டா கிராமத்தில் வசித்து வருபவர் ஷியாம் கோஸ்வாமி (வயது 30). இவரின் மனைவி பிரியா. தம்பதிகள் இருவருக்கும் திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இருவருக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார்.
கருத்து வேறுபாடு
தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஷியாம் லோனி பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். பிரியா நொய்டா பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் வேலை பார்த்து இருக்கிறார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதிகளுக்கு இடையே திடீரென நிலவிய கருத்து வேறுபாடு ஷியாமின் மனத்தை கடுமையாக பாதித்துள்ளது.
இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச்சென்று இலட்சக்கணக்கில் பேரம் பேசிய காவல்துறை; மர்ம மரணமடைந்த இளைஞர்.!
மனைவி கழுத்தை நெரித்துக்கொலை
இதனால் இன்று தனது மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தவர், பின் அதே துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தனது மனைவியை கொலை செய்ததை செல்பியாக எடுத்து உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து பின் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விசயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஷியாம் மற்றும் பிரியா ஆகியோரின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் பந்தயத்தில் முதலீடு செய்து, ரூ.2 கோடி கடனாளியான மகன் அடித்தே கொலை; தந்தை அதிர்ச்சி செயல்.!