மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Watch: நெடுஞ்சாலை திரைப்பட பாணியில், ஓடும் லாரியில் பட்டப்பகலில் தார்பாய் கிழித்து கொள்ளை; அதிர்ச்சி வீடியோ.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், இன்று லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த லாரியின் மேற்கூரை பகுதியில் இருந்த 2 இளைஞர்கள், தார்பாயை கிழித்து லாரியில் எடுத்து செல்லப்பட்ட பொருளை கீழே தள்ளினார்.
பாஸ்ட் அன்ட் புரியஸ் இந்தியன் வெர்சன்:
அதனைத்தொடர்ந்து, இளைஞர்கள் லாரியை பின்தொடர்ந்து நெருக்கமாக வந்த இருசக்கர வாகனத்தில் திரைப்பட பாணியில் இறங்கி தப்பினர். பின்னால் வந்த வாகனத்தில் வந்தவர்கள் எடுத்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பாஸ்ட் & புரியஸ் படத்தின் இந்தியன் வெர்சன் என நெட்டிசன்கள் கருத்து கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அடிக்கிற வெயிலுக்கு ட்ரான்ஸ்பார்மர் என்ன ஆகும்? கூலர் பொருத்தி பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகள்.!
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் அதேவேளையில், முன்பெல்லாம் இரவு நேரங்களில் நடந்த நெடுஞ்சாலை கொள்ளை சம்பவங்கள் பட்டப்பகலில் நாடடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலை படம் போல சம்பவம்
கடந்த 2014 ல் ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான நெடுஞ்சாலை படமும் இதே மாதிரியான கதையை கொண்டது தான். அன்று திரையில் பார்த்ததை மக்கள் இன்று நேரில் பார்த்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
America : The Fast And Furious 11 will be the ultimate
— Raja Babu (@GaurangBhardwa1) May 25, 2024
Indian chor : hold my pulser pic.twitter.com/9b6PN0MCqe
இதையும் படிங்க: சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்ல மறுத்த பெற்றோர்; விரக்தியில் 10 வயது சிறுமி தற்கொலை.!