ஊரடங்கை மீறி இசை கச்சேரியுடன் சமோசா விருந்து.. போட்டோவை போட்டு மாட்டிக்கொண்ட மும்பை வாசிகள்!



Music and samosa party at mumbai

கொரேனா பாதிப்பு அதிகமாகவுள்ள மும்பையில் இசை கச்சேரியுடன் சமோசா விருந்தினை நடத்திய குடியிருப்பு வாசிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையின் கட்கோபார் பகுதியில் குக்ரேஜா பாலஸ் என்ற குடியிருப்பு இருந்து வருகிறது. இந்த குடியிருப்பினை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து இசை கச்சேரி நடத்தி அனைவருக்கும் சமோசா விருந்து வைத்துள்ளனர்.

Mumbai

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகி போலீசார் கண்களிலும் தென்பட்டுவிட்டது.

நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும் சமயத்தில் இப்படி ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்த ஜேத்தலால் தேதியா மற்றும் அந்த குடியிருப்பின் தலைவர் ராகுல் ஷங்வி என்பவரையும் போலீசார் கைது செய்து பின்னர் பெயிலில் அனுப்பியுள்ளனர்.