திரைப்பட பாடகியின் பேரில் ஆன்லைன் கேம் மோசடி; மக்களே நம்பாதீங்க.. உஷார்.!
கர்ப்பிணி மனைவி என்றும் பாராது, கணவன் செய்த பகீர் காரியம்.. துடிதுடித்து பறிபோன உயிர்.!

மனைவியை கர்ப்பிணி என்றும் பாராது ஆற்று நீரில் மூழ்கடித்து கணவன் கொடூர கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு காசுவினஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவரது மனைவி தேவிகா (வயது 28). இந்த தம்பதிக்கு கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஷ் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து, மனைவி தேவிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இப்படியான சூழலில், தேவிகா மூன்றாவது முறையாக கர்ப்பமான நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். நஞ்சன்கூடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தம்பதி இருவரும் ஸ்கேன் எடுக்க சென்ற நிலையில், இவர்களுடன் முதல் குழந்தையும் சென்றுள்ளது. ஸ்கேன் எடுத்து முடிந்ததும் நஞ்சுகேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து செல்லலாம் என தேவிகா ராஜேஷை அழைத்து சென்றுள்ளார்.
அதன்பின்னர், கோவில் அருகே ஓடும் கபிலா ஆற்றில் தேவிகாவை குளிக்க செல்லலாம் என ராஜேஷ் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் இருந்த ராஜேஷ் தேவிகாவை பிடித்து ஆற்றில் மூழ்கடித்து இருக்கிறார். கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் ராஜேஷின் கொடூரம், அவரது மனைவியை துடிதுடித்து கொலை செய்ய வைத்துள்ளது.
தேவிகா மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழக்கவே, குழந்தையையும் ராஜேஷ் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து வரவே, ராஜேஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தேவிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மனைவியின் மீதான சந்தேகத்தால் கர்ப்பிணி என்றும் பாராமல் ராஜேஷ் கொலை செய்தது அம்பலமானது. கொலை செய்துவிட்டு பதுங்கியிருந்த ராஜேஷை கைது செய்த காவல் துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.