ஒரு நொடி நின்று வந்திருக்கலாமே.. 5 வயது சிறுவனுக்கு இப்படியா மரணம் வரணும்? பதறவைக்கும் வீடியோ.!



Nagpur 5 Year old boy Dies Car Accident  

சிறுவனின் அதீத ஆர்வம் நொடியில் அவரின் உயிரை பறிக்க காரணமாக அமைந்தது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் செயல்படும் பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் தந்தையுடன், 5 வயது சிறுவன் ஒருவர் கார் பார்க்கிங் பகுதியில் இருந்தார். 

அப்போது, கார் ஒன்று பார்க்கிங் பகுதிக்கு வந்தபோது, சிறுவனின் தந்தை செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். சற்றும் எதிர்பாராத விதமாக சிறுவன் திடீரென கார் வரும் திசையை நோக்கி ஓடினார். 

இதையும் படிங்க: 50 மாணவிகளை 15 ஆண்டுகளாக சீரழித்த மருத்துவர்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!

சிசிடிவியில் அதிர்ச்சி காட்சிகள்

இதில் சிறுவன் கார் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் மரணம் தொடர்பாக விசாரித்த காவல்துறையினர், சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியிருந்தன. 

Nagpur

அதாவது, சிறுவன் தனது தந்தையுடன் இருந்தபோது, திடீரென முன்னோக்கி வந்துள்ளார். அப்போது காரும் வந்ததால், அதன் சக்கரத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார். நொடிக்குள் நடந்த துயரத்தை கண்டு நெட்டிசன்களும் தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும், 5 வயதுக்குள் இருக்கும் சிறார்களை கையில் இருந்து நொடியும் தவற விடவேண்டாம். 5 வயதை கடந்த சிறார்களுக்கு, பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என பயிற்றுவியுங்கள் என கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: புதுமணமக்கள் போல அலங்கரித்து தம்பதி தற்கொலை.. 28ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி சோகம்.!