குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
50 மாணவிகளை 15 ஆண்டுகளாக சீரழித்த மருத்துவர்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில், 45 வயதுடைய சைக்காலஜி மருத்துவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, மாணவிகளுக்கு உதவுவதாக நடித்து அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்.
அதாவது, மொத்தமாக 50 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மாணவிகளிடம், அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறி, அவர்களிடம் ஆசையாக பேசி அத்துமீறி இருக்கிறார்.
போதை மருந்து கொடுத்து துயரம்
மேலும், மாணவிகளுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறல் துயரத்தை அரங்கேற்றிய நிலையில், அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்துள்ளார்.
இதையும் படிங்க: கட்டணம் கேட்டது குற்றமா? கையெடுத்து கும்பிட்டும் ஆட்டோ டிரைவரை அடித்து துவைத்த இளம்பெண்.!
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் உண்மை அம்பலமாகவே, காவல் துறையினர் மருத்துவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: 13 வயதில் தொடங்கி 65 காமுகர்களால் சிறுமி பலாத்காரம்.. இந்தியாவே பதறும் சோகம்.! கேரளாவில் திடுக் சம்பவம்.!