மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலையில் நடந்த காதல் திருமணம்.! மாலையில் துடிதுடித்து உயிரிழந்த மணப்பெண்.! நேர்ந்த விபரீதம்!!
கர்நாடகா கோலார் மாவட்டம், செம்பரகானஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் 30 வயது நிறைந்த நவீன்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் 20 வயது நிறைந்த லிகிதா ஸ்ரீ. இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடைப்பெற்றது.
மணமக்கள் தகராறு
அதனை தொடர்ந்து மதிய வேளையில் புதுமணத்தம்பதிகள் இருவரும் அறை ஒன்றில் தனியாக அமர்ந்துள்ளனர். அப்பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கி கொண்டுள்ளனர். மேலும் அறையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு கிடந்துள்ளனர்.
உயிரிழந்த மணப்பெண்
அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அதற்குள் மணப்பெண் உயிரிழந்தார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மணமகன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் மாலையில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிகாலையில் நடந்த கோரவிபத்து.! துடிதுடித்து பரிதாபமாக பறிபோன 18 உயிர்கள்.! பகீர் சம்பவம்!!
இதையும் படிங்க: காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன்.. நெகிழ்ச்சி சம்பவம்!