மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன்.. நெகிழ்ச்சி சம்பவம்!
பீகார் மாநிலத்தில் தனது மனைவியை முன்னாள் காதலனுடன் கணவன் சேர்த்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் - மனைவி
பீகார் மாநிலத்தில் உள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், தற்போது ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வதை அவர் கவனித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆசை வார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்!
மனைவியின் தகாத உறவு
இதனை கவனித்த ராஜேஷ் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார். அப்போது அவர் தன்னுடைய பெயர் சாந்தன் எனவும், நானும் உனது மனைவியும் சிறுவயதிலிருந்தே காதலித்து வந்ததாக கூறியுள்ளார். மேலும், தினமும் தனது காதலியை பார்க்க வருவதாகவும், சில நாட்கள் இரவில் கூட வருவதாகவும் கூறியுள்ளார்.
மனைவிக்கு முன்னாள் காதலனுடன் திருமணம்
இதனை கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த ராஜேஷ், தனது மனைவியை அவரது காதலுடன் சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணமும் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்திற்கு பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காதலனுடன் சேர்ந்த திருமணமான பெண் மகிழ்ச்சி
இதுகுறித்து பேசிய ராஜேஷின் மனைவி, எனது முன்னாள் கணவனுக்கு மிக்க நன்றி. நான் இப்போது மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மிதக்கிறேன். இனிமேல் நான் எனது புதிய கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பேன் என கூறியுள்ளார். மேலும், தனது குழந்தையை கணவரான ராஜேஷ் பார்த்துக்கொள்வதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைனில் வேலை தேடி நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!