சாலையோரத்தில் இப்படி ஒரு குறியீடை பார்த்துள்ளீர்களா.. அதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா..?
பொதுவாக சாலையோரங்களில் பல்வேறு குறியீடுகளை கொண்ட பலகைகள் நிறுவப்படுவது வழக்கமான ஒன்று. ஒவ்வொரு குறியீட்டிற்க்கும் ஒரு அர்த்தம் உள்ளது.
அந்த வகையில் புதுவிதமான குறியீட்டைக் கொண்ட பலகை ஒன்று பெங்களூருவின் ஹோப் பார்ம் ஜங்ஷனில் நிறுவப்பட்டுள்ளது. வெள்ளை நிற பலகையில் 4 கருப்பு வட்டங்கள் போடப்பட்டுள்ளன. இதனை கண்காணித்த அனிருத்தா முகர்ஜி என்ற பயணி இதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள முயன்றுள்ளார்.
எனவே அந்த பலகையை புகைப்படம் எடுத்த அவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு போக்குவரத்து அதிகாரிகளிடம் இதற்கான அர்த்தத்தை விளக்குமாறு கேட்டுள்ளார். இந்தப் பதிவினை பார்த்துள்ள வைட்பீல்டு டிராபிக் போலீசார் அதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
அதில் இந்தக் குறியீடு ஆனது “சாலையில் பார்வையற்றவர்கள் நடமாட வாய்ப்புகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை ஓட்டும் மாறு குறிப்பிடுகிறது. ஹோப் பார்ம் ஜங்ஷன் அருகில் பார்வையற்றவர்களுக்கான பள்ளி ஒன்று இருப்பதால் இந்தப் பலகை அங்கு நிறுவப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளனர்.
What traffic symbol is this?@wftrps @blrcitytraffic
— Aniruddha Mukherjee (@yesanirudh) August 1, 2022
This is put up just before Hopefarm signal!#curious pic.twitter.com/OLwW9gZiyy