#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரூ.99 ரூபாயில் உயிரை பறிகொடுத்த புதுஜோடி.. கதறி துடிக்கும் குடும்பம்.!
ரூ.99-க்கு ஆஃபர்
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் இருக்கும் விளையாட்டு மைதானம் ஒன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு கட்டணத்தை ரூ.99 ஆக குறைத்து ஆஃபர் அறிவித்துள்ளது. இதன் காரணமாக முண்டியடித்துக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கிய கூட்டம் விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்துள்ளது.
பதிவு திருமணம்
அந்த வகையில் அக்ஷய் என்ற நபரும் அவருடைய மனைவியான கியாதி என்ற பெண்ணும் கியாதியின் தங்கை ஹரிதா ஆகிய 3 பேரும் சேர்ந்து இந்த விளையாட்டு மைதானத்திற்கு வந்துள்ளனர். சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது. இந்த வருட இறுதியில் மிகப்பெரிய அளவில் இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொள்ள நினைத்து நினைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இறுதிச்சடங்கிற்கு சென்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி.! சோகத்தில் குடும்பத்தினர்.!!
தீவிபத்து
இந்த தம்பதிகள் தங்கள் திருமணத்தை கொண்டாடும் விதமாக விளையாட்டு மைதானத்திற்கு வந்துள்ளனர். அப்போது மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் வெல்டிங் வேலை நடந்து கொண்டு இருந்ததால் அங்கிருந்து இந்த தீ பொறி காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாமல் கருகிய உடல்
கூட்டம் அதிகப்படியாக இருந்ததால் குறுகலான பாதை வழியாக அனைவராலும் வெளிவர முடியவில்லை. இதனால் தீயில் கருகி 28 பேர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர். அதிகப்படியான தீ காயத்திற்கு அவர்கள் ஆளான காரணத்தால் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் கருகி உள்ளது. அங்கிருந்த உடல் யாருடையது என்பதை டிஎன்ஏ பரிசோதனை செய்து கண்டறியும் நிலை ஏற்பட்டுள்ளது.
28 பேர் பலி
இந்த விபத்தில் அக்ஷய், கியாதி, ஹரிதா உட்பட 3 குழந்தைகளும், 6 பெண்களும் 15 ஆண்களும் இறந்துள்ளனர். இது பற்றி போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து யுவராஜ் சிங் மற்றும் ஒரு நபரை கைது செய்துள்ளது.
இதையும் படிங்க: வேரோடு சாய்ந்த மரம்; மனைவி கண்முன் கணவன் பலி.! சிகிச்சைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்.!