மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேரோடு சாய்ந்த மரம்; மனைவி கண்முன் கணவன் பலி.! சிகிச்சைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகே தும்குண்டா பகுதியில் வசித்து வந்தவர் ரவீந்தர் (வயது 52). இவரது மனைவி சரளாதேவி (வயது 44). ரவீந்தருக்கு உடல்நலக்குறைவு இருந்த காரணத்தால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது வழக்கம்.
வேரோடு சாய்ந்த மரம்
அந்த வகையில் நேற்று முன்தினம் ரவீந்தர் தனது மனைவியுடன் பைக்கில் மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவ வளாகத்தில் இருந்த ராட்சத மரம் திடீரென வேரோடு சாய்ந்து பைக் மீது விழுந்தது.
இதையும் படிங்க: கியாஸ் கசிந்து சோகம்; உறங்கிக்கொண்டிருந்த பெற்றோர், 2 மகள்கள் என குடும்பமே பலி.!
மனைவி கண்முன் பரிதாபம்
இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மீட்க முயற்சித்த நிலையில், மனைவி கண்முன்னே ரவீந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சரளாதேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணை
இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரவீந்திரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: போதையில் வீண் தைரியம்; நீச்சல் தெரியாமல் ஆற்றில் குதித்த குடிகார இளைஞன் பலி; வீடியோ உள்ளே.!