ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள்... அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதிய மாணவிகள்! குமுறும் பெற்றோர்.!



parents angry for neet exam

மருத்துவப் படிப்பிக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வு சமீபத்தில் நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம்  சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த சில மாணவிகளிடம், உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மாணவிகள் பலர் வேறு வழியின்றி உள்ளாடைகளை அகற்றிவிட்டு தேர்வு எழுதினர். இந்த விவகாரத்தால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவிகளின் பெற்றோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவி ஒருவரின் தந்தை இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், அங்கு நடந்த சம்பவத்தால் தனது மகள் தான் படித்ததை எல்லாம்  மறந்துவிட்டதாக தெரிவித்தார். எனது மகளிடம் உள்ளாடையை கழற்ற கோரியுள்ளனர். அவள் அதற்கு மறுத்தபோது, தேர்வு எழுத அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

NEET exam

தேசிய தேர்வு முகமையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில், எனது மகளிடம் உள்ளாடையை கழற்ற கோரியுள்ளனர். அவள் அதற்கு மறுத்தபோது, தேர்வு முக்கியமா, உன்னுடைய உள்ளாடை முக்கியமா என அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள் கொண்டு செல்லப்பட்டன என எனது மகள் தெரிவித்தாள். அங்கு நடந்த சம்பவத்தால் பலர் அழுது கொண்டிருந்தனர்.

இதுபோன்று கடுமையான நடத்தைகளின் மூலம் மாணவர்கள் மன ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். பலர் தங்கள் உள்ளாடைகளில் உள்ள ஊக்குகளை அகற்றி அதை கட்டிக் கொண்டனர். இம்மாதிரியான செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என  புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.