ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
÷2 மாணவி தொடர் பலத்தக்காரம்... பி.டி சார் தப்பியோட்டம்.!! போலீஸ் வழக்கு பதிவு.!!
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, உடற்கல்வி ஆசிரியரால் தொடர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியரை தேடி வருகின்றனர்.
பிளஸ் 2 மாணவியுடன் காதல்
பெங்களூர் புறநகர் பகுதியான தாபஸ் பேட்டையைச் சேர்ந்தவர் தாதா பீர். இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்குமிடயே காதல் மலர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவியை அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்திருக்கிறார் உடற்கல்வி ஆசிரியர்.
காவல் நிலையத்தில் புகார்
இந்நிலையில் ஆசிரியர் மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடந்த சம்பவங்கள் குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்களது புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: "வா ஜாலியா இருக்கலாம்..." கானகிரீட் ஸ்லாபல் அடித்து இளம்பெண் கொலை.!! 19 வயது இளைஞர் கொடூர செயல்.!!
ஆசிரியர் தலைமறைவு
காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த ஆசிரியர் தலைமுறைவாகி இருக்கிறார். அவரைப் பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உடற்கல்வி ஆசிரியர் பிளஸ் டூ மாணவியை தொடர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சம்பவம் பெங்களூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "அய்யோ கண்ணெல்லாம் எரியுதே.." ஓடும் பேருந்தில் பயங்கரம்.!!பெண்கள் மீது கெமிக்கல் வீச்சு.!!