"அய்யோ கண்ணெல்லாம் எரியுதே.." ஓடும் பேருந்தில் பயங்கரம்.!!பெண்கள் மீது கெமிக்கல் வீச்சு.!!



unidentified-man-attacked-women-with-chemicals-police-s

ஆந்திர மாநிலத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் மீது கெமிக்கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கெமிக்கல் வீசி தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 3 பெண்கள் மீது மர்ம நபர் ஒருவர் கெமிக்கல் கலந்த பொருளை வீசிவிட்டு பேருந்திலிருந்து தப்பி சென்றார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த பெண்கள் வலியால் அலறி துடித்தனர். இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த சக பயணிகள் தாக்குதலுக்குள்ளான 3 பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

India

நேரில் பார்த்தவரின் வாக்குமூலம்

இந்த சம்பவத்தின் போது பஸ்ஸில் பயணம் செய்த பயணி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக கூறியிருக்கும் அவர், பேருந்தில் திடீரென ஏறிய மர்ம நபர் ஒருவர் 3 பெண்களின் கண்களில் கெமிக்கலை வீசி விட்டு தப்பி சென்றார். இந்த சம்பவத்தில் வலியால் அலறி துடித்த பெண்களை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்ததால் கொடூரம்; பெண் காவலர் ஆணவக்கொலை.. கழுத்தறுத்து வெறிச்செயல்.!

காவல்துறை விசாரணை

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "நம்ம ஆளுங்கள விட காதல் பெருசா.." பெண் போலீஸ் கௌரவ கொலை.!! தம்பி வெறி செயல்.!!