மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீச்சல் குளத்தில் விழுந்த பந்தை எடுக்கச்சென்று, நீரில் மூழ்கி பலியான 4 வயது குழந்தை.. பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள லாஸ்பேட்டை, தாகூர் நகரில் வசித்து வருபவர் அருணகிரி (வயது 35). இவரின் மனைவி ஞானச்செல்வி. இந்த தம்பதிகளுக்கு ரூபன் என்ற 6 வயது மகனும், ரூபி என்ற 4 வயது மகளும் உள்ளனர். வானூர் அருகேயுள்ள பொம்மையார்பாளையம் பகுதியில் வசித்து வரும் நபரின் வீட்டில், அருணகிரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று அருணகிரி தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு, பணியாற்றும் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் பந்து விளையாட ஆசைப்பட்ட நிலையில், அவர்களிடம் பந்தை கொடுத்துவிட்டு அருணகிரி வெளியே சென்றுள்ளார். அப்போது, குழந்தைகள் விளையாடிய பந்து எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் விழுந்துள்ளது.
பந்தை எடுக்க குழந்தை ரூபி முயற்சித்தபோது, அவர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இருக்கிறார். வெளியில் சென்றிருந்த அருணகிரி வீட்டிற்கு வந்த நிலையில், குழந்தைகளை பார்த்தபோது ரூபி நீச்சல் குளத்தில் மூழ்கி இருந்துள்ளார். அருகே இருந்த ரூபன் தனது தங்கையை பெயரிட்டு வெளியே வா என அழைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அருணகிரி மகளை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, ரூபியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ஆரோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.