#Breaking: 30 ஆண்டுகள் இல்லாத மழை, வெள்ளம்., புதுச்சேரியில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..



Pondicherry School College Leave on 2 dec 2024 

கனமழை தந்த பரிசாக வெள்ளத்தை புதுவை எதிர்கொண்டுள்ள நிலையில், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெஞ்சல் புயலாக மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, மரக்காணம் - புதுச்சேரி நடுவே கரையை கடந்தது. இந்த புயலின் காரணமாக நேற்று சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியது.

புயல் கரையை கடந்தபின்னரும் பெய்த மழை காரணமாக, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகள் கடும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளன. சங்கராபரணி, கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கடலூர், புதுவை நகரங்களை நீரில் தத்தளிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: யாருப்பா அந்த காண்ட்ராக்டரு?.. கால்வாய்க்கு நடுவே மின்கம்பம்.. இது புதுசா இருக்குன்னே.!

Fengal Cyclone

இராணுவம் மீட்புப்பணியில் ஈடுபடுகிறது

புதுச்சேரியில் இராணுவம் களமிறங்கி மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரண்மாக உயிர்சேதம் என்பது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை புதுச்சேரியில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் பலத்த மழை காரணமாக எங்கும் வெள்ளம் சூழ்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். பள்ளி-கல்லூரிகள் தற்காலிக முகாம்களாக தற்போது செயல்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: இளம்பெண்ணின் ஆடையை கழற்றச்சொல்லி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.. மக்களே உஷார்.!