அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
5 வயது சிறுமியை அழைத்துச்சென்று சீரழித்த 15 வயது சிறுவன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் கொடூரம்.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் ஐந்து வயதான சிறுமி தனது பெற்றோருடன் இருக்கிறார். இவர்கள் இருவரும் உறவுக்கார நபர்கள் என்பதால், அவ்வப்போது சிறுமியை 15 வயது சிறுவன் வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
5 வயது சிறுமி பலாத்காரம்
அந்த வகையில், மே 18 ஆம் தேதி சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்ற 15 வயது சிறுவன், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். சிறுவனின் செயல்பாடுகளால் மயங்கி போன சிறுமியை, அவரின் பாட்டியிடம் சிறுமி உறங்கி விட்டதாக கூறி விட்டுச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சாபில் பயங்கர சம்பவம்.. இரட்டை குழந்தை கர்ப்பிணி பெண் எரித்துக்கொலை!
அதிர்ந்துபோன பாட்டி
பின் மயக்கம் தெளிந்த சிறுமி தனக்கு அந்தரங்கப் பகுதிகளில் வலிப்பதாக கூற, பாட்டி பரிசோதித்த போது பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, அவரிடம் நடந்ததை கேட்டறிந்த பாட்டி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
பின் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: இரட்டைக்குழந்தைகளை சுமந்த 6 மாத கர்ப்பிணி மனைவி எரித்துக்கொலை; கணவரின் பதறவைக்கும் வெறிச்செயல்.!