வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
இரட்டைக்குழந்தைகளை சுமந்த 6 மாத கர்ப்பிணி மனைவி எரித்துக்கொலை; கணவரின் பதறவைக்கும் வெறிச்செயல்.!
6 மாத கர்ப்பிணி மனைவியை உயிருடன் கொளுத்தி கொலை செய்த கணவரின் அதிர்ச்சியூட்டும் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ், ரேயா, புளெட் நங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் சுக்தேவ். இவரின் மனைவி பிங்கி. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
தம்பதி திருமணம் முடிந்து சில மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும், அதன்பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தற்போது பிங்கி 6 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.
அவர் இரட்டை குழந்தையையும் தனது வயிறறில் சுமந்து இருக்கிறார். இந்நிலையில், நேற்று வீட்டில் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுக்தேவ், தனது மனைவியை கர்ப்பிணி என்றும் பாராது கடுமையாக தாக்கி இருக்கிறார்.
பின், அவரை படுக்கையிலேயே கட்டிவைத்து, தீவைத்து கொளுத்தியுள்ளார். கர்ப்பிணி மனைவி உயிருக்கு அலறித்துடித்தபோதிலும், அங்கிருந்து சுக்தேவ் தப்பிச்சென்றார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், கர்ப்பிணி பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், தலைமறைவான சுக்தேவை தீவிரமாக தேடி வருகின்றனர்.