மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி; த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து.!
18 வது மக்களவை தேர்தலில் வெற்றி அடைந்த பாஜக, மீண்டும் மத்தியில் அரசாக பொறுப்பேற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மத்திய அரசை வழிநடத்துகிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக எதிர்க்கட்சி இடத்தை பெற்றுள்ளது. நேற்று முன்தினம் முதல் மக்களவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல் இரண்டு நாட்கள் மக்களை உறுப்பினர்கள் சபாநாயகர் முன் பொறுப்பேற்றனர்.
தற்போது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிரில்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. எதிர்க்கட்சி தலைவராக யார் செயல்படுவார்? என கூட்டணிகளுடன் இணைந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: #Breaking: "வயநாடு தொகுதி வேண்டாம்., ரேபரேலி போதும்" - காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ராகுல் காந்திக்கு நடிகர் விஜய் வாழ்த்து
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கூட்டணிக்கட்சி தலைவர்கள் பலரும் தங்களின் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய், ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த ட்விட் பதிவில், "இந்திய மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துக்கள், நமது நாட்டு மக்களுக்காக சேவை செய்ய வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Congratulations to Hon'ble Thiru. @RahulGandhi Avargal for being unanimously elected by @INCIndia and its allies as Leader of Opposition in the Lok Sabha.
— TVK Vijay (@tvkvijayhq) June 26, 2024
My best wishes to serve the people of our Nation.
இதையும் படிங்க: டியூசன் சென்று வந்த 16 வயது சிறுமி ஐவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!